இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால்  வெளியிடப்பட்டது.

தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(31) 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் ஆறுகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் அளுத்கங்க கோரள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுமேற்கு முதல் தென்மேற்குவரையான திசைகளிலிருந்துதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.கொழும்பிலிருந்துகாலிமற்றும்ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்துகாலிமற்றும்ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள்மிதமான அலையுடன்காணப்படும்.

Spread the love