இலங்கையில் இன்று மின்தடை மீள ஆரம்பம்

இன்று (24.01) முதல் மீண்டும் மின் தடை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பியூரன்ஸ் ஒயில், டீசல் தட்டுப்பாடே இந்த மின் தடைக்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறைந்தளவான நேரப்பகுதியே மின் தடை செய்யப்படுமெனவும், நாளை முதல் 1 1/2 மணி நேரம் வரையான நேரப்பகுதி மின் தடை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

72 சதவீதமான நிலக்கரி, டீசல் மற்றும் எரிபொருள் தேவைகள் உயர்ந்துள்ளன. கடந்த சனிக்கிழமை மின்சார உற்பத்தி 25 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு 180 மெகா வொட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

24 மெகா வொட்ஸ் மின் உற்பத்தி செய்யும் வடக்கு ஜனனி மின்சார உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டில் இயங்குகிறது, அத்தோடு சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் ஒயில் பெறுவதில் சிக்கல் நிலை காணபப்டுவதனால், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் தேவைகளுக்கான ஒயில் இறக்குமதி செய்யபபடவேண்டிய நிலை ஏற்பட்டுளளதாக மேலும் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love