இலங்கையில் இந்திய இராணுவம் குறித்து இந்தியாவும் விசாரணை செய்யப்பட வேண்டும்- ஐ. நா

ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ. நா. மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்துள்ள பொறிமுறையின் மூலம் இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.

2009 மேயில் இலங்கை போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. மோதலின் போது நடந்தவை உட்பட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண்பதற்காக இலங்கை மீது வலுவான தீர்மானத்தை நாங்கள் கோருகிறோமென்று லண்டனை தளமாகக் கொண்ட மீனாட்சி கங்குலி கூறியுள்ளார். அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படைகள் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்தன, அந்த நேரத்தில் நடந்த முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்பானவர்கள் பொறுப்பு கூறவேண்டும் என்று இந்தியாவின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது கங்குலி இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தியா அரை டஜன் பயங்கரவாத குழுக்களுக்கு அனுசரணை வழங்கிய போது (ஜூலை 1987-மார்ச் 1990), அங்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டிருந்த தருணத்தில் அட்டூழியங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், சமீபத்தியஜெனீவா தீர்மானம் இந்தியாவின் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் நிவர்த்திக்க வேண்டும் என்று அவர் நம்புகிறாரா? என்று த ஐலண்ட் பத்திரிகை அவரிடம் கேட்டிருந்தது ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு தற்போது இடம்பெறுகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் , ஐ. நா. ஆலோசனை நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் , மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியமன்றம் , மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் ஐ. நா. பிரதிநிதி மற்றும் சிரேஷ்ட சட்ட ஆலோசகர், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுசார்பாக கங்குலி பதிலளித்துள்ளார். எவ்வாறாயினும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிலுள்ள பதில் பணிப்பாளர் லூசி ம க்கெர் னன் த ஐலண்ட்டின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை .

Spread the love