இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர் -ஜனாதிபதியை சந்தித்த போது சமந்தா பவர் தெரிவிப்பு

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு மேலும் முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள சமந்தா பவர், இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். தற்போது இலங்கை எதிர் கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமந்தா பவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திர மற்றும் திறந்த இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதரவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Spread the love