இருண்டு கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம்

இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் இருண்டதாக உள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கையின் பொதுக்கடன் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணை பெறுபேற்று அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன என்று உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டங்களை தயாரித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா? இல்லையா? என்பது தொடர்பாக தெளிவான அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love