இன்ஸ்டாகிராமில் உலகளவில் பெரிய சாதனை படைத்த தளபதி விஜய்!

நடிகர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் ட்விட்டரில் இருந்தாலும் அதில் வருடத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே போடப்படுகிறது. இருந்தாலும் அந்த பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகிறது.

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் நேற்று  மாலை 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். விஜய்யின் அதிகாரபூர்வ இன்ஸ்டா கணக்கிற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். 99 நிமிடங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை இது கடந்திருந்தது. இதன் மூலமாக மிக வேகமாக 1மில்லியன் followers பெற்றதற்காக உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறார் விஜய்.

1. பிடிஎஸ் V – 43 நிமிடங்கள்

2. ஏஞ்சலினா ஜோலி – 59 நிமிடங்கள்

3. விஜய் – 99 நிமிடங்கள்

இன்று 4.1 மில்லியன் followers பெற்றிருக்கிறார் விஜய்.

Spread the love