இன்று(26) இடம்பெறவுள்ள ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம் இன்று(26) பிற்பகல் 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என, பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமது கட்சி கலந்துகொள்ளுமா என்பது தொடர்பில் தாம் அறியவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Spread the love