இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று கொடுத்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார்.மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர்மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார்.

இதன்படி 50 மீற்றர், 100 மீற்றர், 200 மீட்டர், 400 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை தட்டி சென்று உள்ளார். இதனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக ஆகியுள்ளார். கடந்த ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, ஆண்கள் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களையும் மற்றும் ஆடவர் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love