இந்தியப்பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, தனியார் தொலைக்காட்சியொன்று, சிறுவர்களை வைத்து எடுத்த நிகழ்ச்சி தொடர்பில், குறித்த தொலைக்காட்சி மன்னிப்புக் கோரவேண்டுமென, பாரதிய ஜனதாக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்திலிருக்கும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியில், குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவைக் காட்சியில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவை காட்சி, தற்போது சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும், பிரதமர் நரேந்திர மோடியின் கறுப்புபண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது, உட்பட பல நிகழ்வுகளை விமர்சித்து, வசனங்களைப் பேசியிருந்தனர். அத்துடன், வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டுமெனவும், தென்னிந்தியாவில் மன்னராகவே வந்தாலும், யாரும் மதிக்கமாட்டார்கள் என இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், இந்தக் காட்சியடங்கிய காணொளி, குறித்த தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Spread the love