மாரடைப்பு அபாயத்தை நீக்கும் அன்றாட உணவு வகைகள்

இன்றைய இயந்திர உலகில் நாமும் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாட்களும் ஓடிக்கரைந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி போல பிறப்பு இறப்பு இறைவனின் விளையாட்டாகித்தான் போனது. அதில் மரணம் என்பது இயற்கையில் மறுக்கமுடியாத உண்மையே ஆனாலும் இறப்பு என்பது வேதனைக்குரிய விடயமே ஆகும்.

அதுவும் நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க கூடாது அதைக்கட்டுப்படுத்த வேண்டும்

• உணவில் கொலஸ்டிராலை கரைக்கும்  பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டும்

• உடலை பிட் ஆக வைத்திருக்க வேண்டும்.

கொலஸ்ட்ராலானது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருளாகும். அதவே கொழுப்பாகும் கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன,
நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும்.
மற்றொன்று கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும்

நம் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள், செல்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை உருவாவதற்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமாகிறது.

அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ராலானது அதிகரிப்பது மிக மிக ஆபத்தானது ஆகும். இரத்த நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும்போதே அதன் காரணமாக மனிதர்களின் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும் ,அல்லது ரத்தம் ஓட்டத்திற்கு தடையாகவோ மாறும்.  ரத்த ஓட்டம் தடை படும் போது தான் சடுதியான மாரடைப்பு ஏற்படுகிறது . அத்தகைய கெட்ட கொழுப்பான கொலஸ்ரோலைநமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை 2 நாட்களுக்குள் இரத்த நாளங்களில் இருந்து வெளியேற்ற நமது வீட்டிலேயே தீர்வு உள்ளது.

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 

20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 100 mg / dL க்கும் குறைவாக இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் சொல்கின்றனர்.

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகளாக இவை சொல்லப்படுகின்றன.

  • ஆம்லா  எனப்படும் நெல்லிக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு சீராகும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
  • இது தவிர சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

. பூண்டும் மிக சிறந்த வகையில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். 

  • இது தவிர தினமும் உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறும்.
  • தினமும் உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும். பொதுவாக,  மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுளும் இருதய பலமும் பெற்று பேரன் பேத்திகள் கண்டு வாழ உணவே மருந்தாகக்கொண்டு வாழ்ந்தாலே போதுமானதாகும்.
Spread the love