ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிக்கை

பாடசாலை வகுப்புக்களுக்கு இதன்பின்னர் தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட கால பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ஜெயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று (24) பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஆசிரியர் சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு 2 வழிமுறைகள் உண்டு. பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டிப்ளோமா பட்டங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வது மாற்று முறையிலாகும். 19 கல்வியல் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய கல்வி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இதில் 4 வருட கால பட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவர். செயல்திறன் மிக்க சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love