அவுஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்கார் விபத்தில் பலி

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்டு சைமண்டஸ் நேற்றிரவு இடம்பெற்ற கார் விபத்தில் பலியானார். குயின்ஸ்லாந்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்தக் கார் விபத்து இடம்பெற்றதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தின்போது சைமண்ட்ஸ் மட்டுமே காரில் இருந்துள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து உருண்டு விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், சம்பவ இடத்திலேயே சைமண்ட்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். 46 வயதாகும் சைமண்ட்ஸ், அவுஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 முதல் 2007ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய போது அத்த அணியின் முக்கிய தூணாக சிறந்த சகலதுறை வீரராக சைமண்ட்ஸ் வலம் வந்தார்.

தனது வித்தியாசமான தலைமுடி அலங்காரம் மூலம் சைமண்ட்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவராவார். சர்வதேச கிறிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கிறிக்கெட் போட்டி வர்ணனையாளராக சைமண்ட்ஸ் பணியாற்றி வத்தார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் மற்றொரு சிறந்த வீரரான ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இப்போது கிரிககெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொருவீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Spread the love