அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்கள்

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வசம்சாவழியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அந்நாட்டு சமஷ்டி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்கட்சியின் சார்பில் விக்டோரியா மாநிலம் மெல் பேர்னின் Higgins தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவரான மிச்சேல் ஆனந்த ராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் 56.1% வாக்குகளைப்பெற்றுள்ளார். அதாவது 30 ஆயிரத்து 46 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை அவுஸ்திரேலியா சமஷ்டி பொதுத்தேர்தலில் விக்டோரிய மாநிலத்தில் வசிக்கும் மேலும் மூன்று இலங்கையர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தொழிற் கட்சியின் சார்பில் ஹொல்ட் தொகுதியில் போட்டியிட்ட கேசன்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார். இவர் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஞ்ச் பெரேராவை எதிர்த்து போட்டியிட்டார். 57.5 வீதம் என்ற அடிப்படையில், கேசன்ட்ரா பெர்னாண்டோ 40 ஆயிரத்து 187 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேவேளை விக்டோரியா மாநிலத்தில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கையரான விரோஷ் பெரேரா 17 ஆயிரத்து 385 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

https://mobile.twitter.com/rajah_mich/status/1528113736263020544

Spread the love