அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஏனைய அம்சங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Spread the love