அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி?

பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியதாவது:-
கொரோனா உருமாறிய வைரசான ஒமைக்ரானை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம். பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம். 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி போடுவது வெளிப்படையாகவே பின்பற்றப்படும். 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனைகள் பைசர் மருத்துவ நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவில் 5-வது வாரமாக கொரோனா வைரஸ் இறப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் 68 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 7 சதவீதம் அதிகமாகும்.

Spread the love