அன்றாட உணவில் உயிர்ச்சத்து ஏ நிறைந்த உணவுப் பொருட்கள்

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு தேவைப்படும். ஆனால், இன்று நாம் சாப்பிடும் உணவுகளானது சரியான ஊட்டசத்துக்கள் நிறைந்தவையாக இருப்பதில்லை.

பெரும்பாலும் 3 வேலை உணவுகளிலும் கார்போஹைடிரேட் மட்டுமே அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக நமக்கு வேண்டிய மற்ற சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. குறிப்பாக வைட்டமின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்து கொள்வதில்லை. இதன் காரணமாக பல வித பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் ஏ சத்தும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வைட்டமின் ஏ சத்தானது நமது கண்களுக்கும், நரம்புகளுக்கும், தோலிற்கும், மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. இந்த பதிவில் எந்தெந்த உணவுகளில் வைட்டமின் ஏ சத்து உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

தக்காளி : தக்காளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இதில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. தக்காளியில் கரோட்டினாய்டுகளின் வடிவத்தில் 16% வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரட் : வைட்டமின் ஏ சத்தானது உங்கள் கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவி செய்கிறது. வைட்டமின் ஏ சத்து போதுமான அளவு இல்லாதவர்களுக்கு இரவில் கண்பார்வை மங்கலாம் அல்லது இரவில் மட்டும் பார்வைக் குறைபாடு ஏற்படலாம். எனவே உங்கள் தினசரி உணவில் வைட்டமின் ஏ உள்ள உணவுகளை அவசியம் எடுத்து கொள்ளுங்கள். அரை கப் கேரட்டில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. எனவே தினசரி கேரட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

கீரை : பொதுவாக வைட்டமின் ஏ இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இறைச்சி, கோழி, மீன் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வைட்டமின் ஏ. அதே போன்று புரோ-வைட்டமின் ஏ என்பவை பழங்கள், கீரை வகைகள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. இவை அனைத்துமே உடலுக்கு தேவையானவை. முக்கியமாக கீரை வகைகளில் அதிக வைட்டமின் ஏ சத்து உள்ளது. எனவே கீரைகளை மறவாமல் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு : வைட்டமின் ஏ சத்து சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் 1 சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சேர்த்து கொள்ளலாம். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மட்டுமல்லாமல், சுவையான உணவாகவும் அமையும்.

முட்டையின் கரு : வைட்டமின் ஏ குறைபாடு உள்ள மக்களை கொண்ட வளர்ச்சியடையாத நாடுகளில் இது கடுமையான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மரணம் அல்லது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் ஏ பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முட்டை பெரிதும் உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் பக்கவாதம் வராமலும் தடுக்கலாம்.

Spread the love