அதிக வெப்பநிலையுடன் இதய நோய் அதிகரிக்கும் ஆபத்து!

இந்த நாட்களில் நாட்டை பாதித்துள்ள அதிக வெப்பநிலையுடன் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் டொக்டர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் திறந்த வெளியில் பணிபுரிபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது எனினும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெளிப்புற விளையாட்டுகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் .

மேலும், தர்ப்பூசணி, ஆரஞ்சு , தேங்காய் தண்ணீர் போன்ற உள்ளூர் பானங்களை முடிந்தவரை அருந்துவது நல்லது மேலும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க கொத்தமல்லி, கஞ்சி போன்றவற்றை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love