அடுத்த 2 வாரங்களுக்குள் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(18) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த வாரத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியுமாயின் தரவுகளை பதிவேற்ற முடியும் என எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீட்டு தரவுகளை QR CODE முறைமைக்குள் உள்வாங்க வேண்டிய செயற்பாடுகள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலையில், தனியார் பஸ்களுக்கு இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக  முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமென எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெட்ரோல் விலை இரு தடவைகளில் குறைக்கப்பட்டதாகவும் ஆகையினால் அதன் பலனை மக்களுக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love