X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று(11) தெரிவித்தார்.
அதற்கமைய குறித்த கப்பல் நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். X-Press Pearl கப்பல் தொடர்பான இரண்டாம் நாள் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் கூறினார்.