எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

இலங்கையில் இடம்பெற்ற வாயு விபத்துக்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக எரிவாயு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வினவிய போது குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இது தொடர்பான அறிக்கை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வாயு விபத்துக்கள் தொடர்பில் முழுமையான மற்றும் முறையான விசாரணைகளின் பின்னரே தனது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது குழுவின் அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய தொடர்புடைய அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Spread the love